Thursday, 19 April 2012

ஐபிஎல் 5: டெக்கான் சார்ஜர்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் குவிப்பு

டெல்லி: ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 157 ரன்களை குவித்தது. ஷிகார் தவன், பார்த்திவ் பட்டேல் ஆகியோர் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Morkel 
ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியி்ல் டெல்லி டெர்டேவில்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. போட்டியின் டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் சங்கக்காரா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஷிகார் தவனும், பார்த்திவ் பட்டேலும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக பேட்டிங் செய்த ஷிகார் தவன் 29 பந்துகளை சந்தித்து 1 சிக்ஸ், 5 பவுண்டரிகளை அடித்து 44 ரன்களை குவித்தார். ஆனால் ஷாபஸ் நதீம் பந்தில் எல்.பி.டபில்யூவாகி வெளியேறினார்.

அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த பார்த்திவ் பட்டேல் 45 ரன்களில் அவுட்டாகி, அரைசதம் கடக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அடுத்த வந்த டுமினி 4 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்ற டேனியல் கிறிஸ்டியன் 19 ரன்களில் அவுட்டானார்.

அதன்பிறகு வந்த டெக்கான் சார்ஜர்ஸ் பேட்ஸ்மேன்கள் அபிஷேக்(4), டேல் ஸ்டேன்(2), அமித் மிஸ்ரா(6) என்று வரிசையாக அவுட்டாகினர். இறுதி வரை அவுட்டாகாமல் இருந்த பாரத் சிப்லி 25 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 157 ரன்களை குவித்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாக மோனி மார்கல், சபாஷ் நதீம் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

No comments:

Post a Comment