இந்திய மாஸ்டர் பேட்ஸ்மென், 100 சதங்களை அடித்த சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 39வது வயதை முடித்து 40வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார்.
ஏப்ரல் 24, 1973ஆம் ஆண்டு பாம்பேயில் பிறந்தார் சச்சின் டெண்டுல்கர்.
இன்று தனது குடும்பம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கேக் வெட்டி இன்றைய பிறந்த திஒனத்தை சச்சின் கோண்டாடுகிறார்.
நாளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டி இருப்பதால் அவர் இன்று பயிற்சி முடிந்தவுடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கோண்டாடவுள்ளார்.
டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி மற்றும் மும்பை இந்தியன் அணி வீரர்கள் நேற்று விமானத்தில் மொஹாலி வந்து சேர்ந்தனர்.
மும்பை இந்தியன் அணி தங்கியிருக்கும் 5 நட்சத்திர விடுதியிலும் சச்சின் பிறந்த நாளைக் கோண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
100வது சதம் எடுத்த பிறகு சச்சின் டெண்டுல்கர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது என்பதால் சதத்தை கொண்டாடும் விழாவாகவும் இது அமைய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே அவர் தங்கியுள்ள விடுதிக்கு வெளியே சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூற ரசிகர்கள் பலர் காலை முதல் காத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இதே தினம் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. காரணம் இவர் சாய்பாபாவின் பக்தர், இதே தினத்தில் சாய்பாபா கடந்த ஆண்டு சித்தி அடைந்தார்.
23 ஆண்டுகளாக கிரிக்கெட்டை உயர்மூச்சாகக் கருதி உலக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவரும் சத சத நாயகனுக்கு நாமும் வாழ்த்துகளை தெரிவிக்கலாமே!

No comments:
Post a Comment