Saturday, 19 May 2012

ரஜினியோடு நடிச்சா நல்லாருக்கும் - 'ஃபீல்' பண்ணும் அசின்

Asin Wishes Play With Rajini Aid0136ரஜினியுடன் நடித்தால் நன்றாக இருக்கும். ஆனால் அதை படத்தின் இயக்குநர் -தயாரிப்பாளர்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார் நடிகை அசின்.

மூன்று படங்களை முடித்துள்ள அசினுக்கு இப்போது இந்தியில் பெரிதாக வாய்ப்பில்லை. இந்த நேரத்தில் மீண்டும் தமிழில் பிஸியாக வாய்ப்பை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார் அவர்.

கோச்சடையான் அனிமேஷன் படத்தில் ரஜினிக்கு ஹீரோயினாகிவிட்டால், இந்தியா முழுக்க பிரபலமான நடிகையாகிவிடலாம் என்பது அவர் எண்ணம்.

ஏற்கெனவே இந்தப் படத்தில் நடிப்பது குறித்து பேச்சு நடத்தப்பட்டு, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மலையாள நடிகைகளுக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. 

இப்போது மீண்டும் அசினுடன் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது. அதை ஆமோதிக்கும் வகையில், கோச்சடையானில் நடிக்க நான் மிக ஆவலாக இருக்கிறேன். ரஜினியுடன் நடித்தால் நன்றாக இருக்கும். நான் ரெடி. இயக்குநரும் தயாரிப்பாளரும்தான் இனி அதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment