ராதிகாவின் கவர்ச்சி உடையால் படப்பிடிப்பில் ரகளை!
நடிகை ராதிகா ஆப்தே பங்கேற்ற ஷூட்டிங்கில், ரசிகர்களின் ரகளையால் ஷூட்டிங் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. 'தோனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் இப்போது 'வெற்றிச்செல்வன்' என்ற படத்தில் அஜ்மல் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்றுள்ளனர் படக்குழுவினர். அங்கு ஷூட்டிங்கை காண ஏராளமான பேர் திரண்டிருந்தனர். ஷூட்டிங்கில் ராதிகா ஆப்தே ரொம்பவும் கவர்ச்சியான உடையணித்து நடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் சிலர், ராதிகா ஆப்தேயின் கவர்ச்சியான தோற்றத்தை தங்களது கேமரா மற்றும் செல்போன்களில் படம் பிடிக்க தொடங்கினர். இதனால் ஷூட்டிங்கிற்கு இடையூறு ஏற்பட்டது. இதனையடுத்து படக்குழுவினர் அவர்களை இப்படி செய்யாதீர்கள் என்று தடுத்து நிறுத்தினர். இருந்தாலும் அவர்கள் கேட்டபாடில்லை. ஆத்திரமடைந்த சிலர் படக்குழுவினரை தாக்க முற்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு, ராதிகா ஆப்தேயையும் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது பதட்டம் நிலவியது. ரசிகர்களின் இந்த செயல் ரொம்பவே வேதனையளிப்பதாக படத்தின் நாயகன் அஜ்மல் கூறியிருக்கிறார். செக்ஸி டிரெஸ்ஸ செட்டுக்குள்ள வச்சிக்கிடலாம்ல சார்....?!
No comments:
Post a Comment